jump to navigation

Same Shastra – differences in following why? April 30, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
1 comment so far

Sri:

While Shastra and Sampradaya are common
some are following the traditional values as living as per shastra
and many people are not considering that.

While Shastras are common and which insists to do 96 Tarpanams a year
Very less people are doing all the 96 Tarpanams
Very few people are doing Masa Pirappu and Amavasai every month most of the people are doing only Tarpanam for 4 Masa pirappu.
Some are doing Tarpanam when they find leasure and there is no other good/interesting work to do.
Some are not at all doing Tarpanams.
So, you should think yourself to decide to fix yourself in a suitable category.

2. Tarpanam is a very very simplest form of shrardham which should be done by everyone
without seeking a vadhyar support, then only you can do it at the specific time mentioned for it.
If many people are depending for a (same) Vadhyar, definitely he could satisfy specific time contition for only one person. If that Vahyar also doing Tarpanam, definitely he could not do it in time.
Who knows? your Sampandhi may asked the vadhyar to come in the next days morning?!!

Also, most of us are not doing the monthly tarpanams in the particular punyakalams.
So, some people may think, "We are doing at least in a later time, without leaving it, that is enough!".

"Main part of everything will be done by all people in some way,
but the fine part of that thing will be done according to situation, guidance,
knowledge and shradhA."
nvs

— In vaideekam, kochappa Iyengar <kochappaa@…> wrote:
>
> Swamin
> With humble pranams I request to be clarified:
> 1.While shastras are common fro all Hindus, why only the Tamil Brahmins do every month tharpanam on amavasya day and maasa pirappu, while the brahmins from other states like Telugus, North Indian brahmins do not do the same monthly?

>
> 2. My sampathis vaathayar performs the chandra grahanam tharpanam to my sampanthi on the following morning. Is it permissible or it should be done only during the grahanam period.
> Adiyen
> Kochappaa dasan
>

It is not a butter research; but a better research! April 30, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

வெள்ளைக்காரன் புத்திசாலி​?!​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3268-வெள்ளைக்காரன்-புத்திசாலி!

Here is the message that has just been posted:
***************

வெள்ளைக்காரன் புத்திசாலி!

கல்வித்துறையில் ரொம்ப பெரிய போஸ்டில் இருந்தவர் ஒருவர் மடத்துக்கு அடிக்கடி வருவார்.

ஒருதடவை அப்படி வரும் போது தன்னுடன் இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்து வந்தார். வந்தவர், வெறுமனே அவர்களுடன் வரவில்லை, கூடவே "தன்னை நாடி இங்க்லாண்டிலிருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள்!" என்ற பெருமிதம் தலைக்கேற வந்தார்.

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு "இவா ரெண்டு பேரும் லண்டன்ல ரிஸர்ச் பண்ணிண்டிருக்கா…. almost எல்லா சப்ஜெக்ட்லேயும் புகுந்து வெளையாடியிருக்கா….பொதுவா இங்க்லீஷ்காராளே ரொம்ப புத்திசாலிகள்! அதுலேயும் இவா ரெண்டு பேரும் ரொம்ப intelligent! பிஹெச்.டி பண்ணியிருக்கா… இங்க்லீஷ்லதான் வர்ஷாவர்ஷம் புதுசுபுதுசா வார்த்தைகள் சேர்ந்துண்டே போறதே! புது scientific வோர்ட்ஸ் நெறைய கண்டு பிடிச்சிருக்கா. அதான், அந்த பாஷை தேங்கிப் போய் பாஸி பிடிக்காம pureஆ இருந்துண்டு இருக்கு…"

இங்க்லிஷுக்கு ஒரு ஸ்தோத்ரமே பண்ணிவிட்டார் !

யார் முன்னால் பேசினாலும் டம்பம் இல்லாமல் அடக்கமாகப் பேசவேண்டும். அதுவும் ஞானக்கடலான பெரியவா மாதிரி மஹான்கள் முன்னால், தெரிந்தாலும் பேசாமல் அடக்கமாக இருப்பதுதான் சிறப்பு.

தலைகால் தெரியாமல் அதிகம் பேசுவது நம்முடைய மடமை. ஏனென்றால் யார் முன் பேசுகிறோம்! ஒரு வழியாக அவர் மூச்சு விட சற்று நிறுத்தியதும், ஞான சாகரத்திலிருந்து ஒரு துளி வெளியே வந்து விழுந்து அங்கிருந்தோரைத் திணற அடித்தது.

"ஆமாமா….இங்க்லிஷ்காரன் ரொம்…ப புத்திசாலிதான்! நாம என்ன பண்றோம்? பாலைத் தயிரா ஆக்கறோம். அது ஸ்வபாவமா நடக்கறது. ஆனா, தயிரைப் பாலா மாத்தறதில்லே; ஏன்னா…..அது முடியாத விஷயம்.

அதுனாலதான் அக்ஞானிகளான நாம, அந்த மாதிரில்லாம் முயற்சி பண்றதில்லை. ஆனா, இங்க்லிஷ்காரன் புத்திசாலியோன்னோ…. "இதோ, தயிரைப் பாலாக்கி காட்டறேன்"..னான்! Butter Milk ன்னு ஒரு வார்த்தையை கண்டுபிடிச்சுட்டான்! பாத்தியா! எவ்ளோ..வ் சுலபமா butterஐ மில்க் ஆக்கிட்டான்!

நாம என்னவோ அதை "மோர்"ன்னு சொல்றோம்; milk ன்னு சொல்றதில்லே"…. புன்சிரிப்புடன் பெரியவா சொன்னதும் கல்வித்துறையின் முகத்தில் ஈயாடவில்லை. சுற்றி இருந்தவர்கள் இந்த விளக்கத்தை கேட்டு, அதிலிருந்த "இதுநாள் வரை காணத் தவறிய" உண்மையை உணர்ந்து புன்னகைத்தனர்.

அந்த வெள்ளைக்கார மாணவர்களோ, பெரியவா சொன்னதை மொழி பெயர்த்து கேட்ட பின்,

"Oh ! My God ! It is not a butter research; but a better research!….." என்று ஆச்சர்யப்பட்டு மிகவும் ரசித்தார்கள்.
Source:Kanchi Periva (http://periva.proboards.com/user/1)
Administrator

***************

Nutrition facts of Coconut water April 27, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
1 comment so far

P.S.NARASIMHAN has just posted in the Health & Fitness Suggestions forum of Facebook+1 for Brahmins under the title of nutrition facts of Coconut water.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3263-nutrition-facts-of-Coconut-water

Here is the message that has just been posted:
***************
Health benefits of coconut waterCoconut water is a very refreshing drink to beat tropical summer thirst. The juice is packed with simple sugar, electrolytes, and minerals to replenish hydration levels within the body.

Coconut water has been generally offered to patients with diarrhea in many tropic regions to replace the fluid loss from the gastrointestinal tract and reduce the need for intravenous therapy. The osmolarity of tender coconut water is slightly greater than that of WHO recommended ORS (Oral Rehydration Therapy) osmolarity. Presence of other biological constituents like amino acids, enzymes, minerals, and fatty acids may account for this higher osmolarity. However, unlike WHO-ORS, its water is very low in sodium and chlorides, but rich in sugars and amino acids. This well-balanced fluid composition with much-needed calories would be an ideal drink than any other brand of soft drink beverages in dehydration conditions.

* Coconut water is composed of many naturally occurring *bioactive enzymes* such as acid phosphatase, catalase, dehydrogenase, diastase, peroxidase, RNA-polymerases etc. In effect, these enzymes help in the digestion and metabolism.

* Despite very light consistency, its water has much better composition of minerals like calcium, iron, manganese, magnesium, and zinc than some of the fruits like oranges. (Compare the mineral composition of oranges (http://www.nutrition-and-you.com/orange-fruit.html)).

* Its water is also a very good source of B-complex vitamins such as riboflavin, niacin, thiamin, pyridoxine, and folates. These vitamins are essential in the sense that the human body requires them from external sources to replenish.

* Coconut water contains a very good amount of electrolyte* potassium*. 100 ml of water has 250 mg of potassium and 105 mg of sodium. Together, these electrolytes help replenish electrolyte deficiency in the body due to diarrhea (loose stools).

* Further, fresh coconut water has a small amount of vitamin-C (Ascorbic acid); It provides about 2.4 mg or 4% of RDA. Vitamin C is a water-soluble ant-oxidant.

***************

திதிகளில் செய்ய தகுந்த காரியங்கள் – ​​ THITHIK ALIL SEYYA THAKUNTHAVAI April 25, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​

​​
THITHIKALIL SEYYA THAKUNTHAVAI.
​ திதிகளில் செய்ய தகுந்த காரியங்கள்.

ப்ரதமை: வாஸ்து கர்மங்கள்;
துவிதியை: ப்ரதிஷ்டை; வ்ரதம்; பூஷண தாரணம்;காரியாரம்பம். குட முழுக்கு;
த்ருதியை: அன்ன ப்ராஸனம், சங்கீதம் பயிற்சி; சீமந்தம்; சில்ப கர்மம், ஸகல சுப கர்மம்.
சதுர்த்தி: ச்த்ரு பாத நிவர்த்தி; யுத்தம்;அக்னிப் ப்ரயோஜனம்.விஷ சஸ்த்ரம்.

பஞ்சமி: எல்லா சுப கார்யங்களுக்கும் ஏற்றது.
சஷ்டி :சில்ப கர்மம். வாஸ்து. வாஹனாதிகள் வாங்குதல்; ஆபரணம் உண்டாக்குதல்;/வாங்குதல்;
ஸப்தமி: யானை. குதிரை, வாஹணங்கள் வாங்குதல்; விவாஹம். சங்கீத வாத்யங்கள், வஸ்த்ரம் பூஷணம் தயாரிப்பது./வாங்குதல்;
அஷ்டமி: நடனம், யுத்தம், சாஸ்த்ர தாரணம்.

நவமி; கலகம், விஷாக்னி, சஸ்த்ர ப்ரயோகம்,(அறுவை சிகிச்சை)
தசமி: விவாஹாதி சுப கர்மங்கள்; பூஷண தாரண்ம், யாத்ரை; கிரக ப்ரவேசம்; வாஹனம் ஏறுதல்;
ஏகாதசி: விவாஹம்; விரதம்; கடன் தீர்த்தல்; சில்பம்
துவாதசி; விவாகாதி சுப கர்மங்கள். யாத்திரை தவிற

த்ரயோதசி: தெய்வ நியமங்கள்; யாத்திரை, சத்ருநிவர்த்தி, வஸ்த்ர தாரணம்;
சதுர்த்தசி: விஷ ப்ரயோகம்; சஸ்த்ர ஆயுதம் தயாரிப்பது.
அமாவாசை: பித்ரு யாகாதிகள். அக்கினி யாதானம்; மஹா தானம்.
பெளர்ணமி: யக்ஞ கர்மங்கள்; சில்ப விருத்திகள்;; விரதங்கள்;

மஹா விஷ்ணுவிடம் அஷ்டமி, நவமி திதிகள் முறையிட்டதின் பலனாய் கிருஷ்ணாஷ்டமி, ராமநவமி பிற்ந்த நாளாய் கொணடாடப் படுகிறது.
பொதுவாக திதிகளில் பிறந்த நாட்கள் யாரும் கொன்டாடுவதில்லை.
; .

கரணத்தில் செய்யும் சுப கார்யங்கள். சர கரணம்=7.
பவம்: பெளஷ்டிக ஸ்திர சுப கார்யங்கள்
பாலவம்: பிராமண் பூஷணம்.
கொளலவம்> பெண்களுக்கு உரிய கார்யங்கள்.

தைதுலம்: சுப கார்யங்கள், ஸத் ஜன ஆஸ்ரயம்.
கரசை: விதை விதைத்தல்
வணிசை: வ்யாபாரங்கள்; நிலையான சுப கார்யங்கள்.
பத்திரை: ஏவல்; பில்லி; சோன்யம்; விஷ ப்ரயோகம்.

ஸ்திர கரணம்=4. இவைகளில் சுப கார்யங்கள் செய்ய கூடாது.

சகுனி: மந்த்ரோபதேசம்; மருந்து சாப்பிடுதல்.
ச்துஷ்பாதம்: பித்ரு காரியங்கள்.
நாகவம்: உக்கிர காரியங்கள்.
கிம்ஸ்துக்னம்: யாகம்; அக்னி கார்யங்கள்.

இந்த ஸ்திர கரணம் எப்போதும் அமாவாசை, பிரதமை;பெளர்ணமி பிரதமை களில் தான் வரும்.
​​
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3239-THITHIKALIL-SEYYA-THAKUNTHAVAI

***************

பிராம்மணம்-ஆரண்யகம் April 24, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

Padmanabhan.J has just posted in the News & Knowledge to Share forum of Facebook+1 for Brahmins under the title of பிராம்மணம், ஆரண்யகம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3235-பிராம்மணம்-ஆரண்யகம்

Here is the message that has just been posted:
***************

வேதம் – பிராம்மணம், ஆரண்யகம்

இதுவரைக்கும் நான் வேதம் என்று சொன்னதெல்லாம், அநேகமாக ஒரு வேத சாகையின் ஸம்ஹிதா பாகத்தைத்தான். ஸம்ஹிதைதான் வேதத்தின் main text . இதைத் தவிர, ஒவ்வொரு வேதத்திலும் ப்ராஹ்மணம் என்று ஒரு பாகமும், ஆரண்யகம் என்று ஒரு பாகமும் உண்டு.

ப்ராஹ்மணம் என்ற பாகத்தில் வைதிகமான கர்மாக்கள் இன்னின்ன வென்று விதிக்கப்படுகின்றன. அவற்றை இப்படி இப்படிச் செய்யவேண்டும் என்றும் அவற்றில் விளக்கியிருக்கிறது. வேத ஸம்ஹிதையில் வருகிற மந்திரங்களை யக்ஞம் என்ற காரியமாக்குகிறபோது இன்னின்ன வார்த்தைக்கு இப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றும் பிராம்மணத்தில் சொல்லியிருக்கும். யக்ஞாதி கர்மாக்களைப் பண்ணுவதற்கு இவை guide-book என்றும் சொல்லலாம்.

ஆரண்யகம் என்பதில் ‘ஆரண்ய’என்ற வார்த்தை இருக்கிறது. தண்டகாரண்யம், வேதாரண்யம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அரண்யம் என்றால் காடு. வேத ஸம்ஹிதையிலோ, பிராம்மணத்திலோ "வீட்டை விட்டுக் காட்டுக்குப் போ"என்று சொல்லியிருக்கவில்லை. வீட்டிலே வாழ்ந்து கொண்டு கிருஹஸ்த தர்மத்தை (இல்லற வாழ்நெறியை) நடத்திக் கொண்டு வரும்போது பண்ண வேண்டியதுதான் யக்ஞம் முதலான வைதிக கர்மாநுஷ்டானங்கள். ஆனால், இவற்றால் சித்த சுத்தி ஏற்பட்டபின், காட்டுக்குப் போய் மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காரத்தான் வேண்டும். அதற்கான பக்குவத்தை அடைவதற்குத்தான் அத்யயனமும், யக்ஞ கர்மானுஷ்டானமும் பூர்வாங்கம். காட்டுக்கு ஒடுவதற்குத் தயார் பண்ணுவதுதான் ஆரண்யகம்.

ஸம்ஹிதையில் மந்திரமாகவும், பிராம்மணத்தில் கர்மாவாகவும் இருப்பதன் தத்வார்த்தம் என்னவோ, உள்பொருள் என்னவோ அந்த ஸித்தாந்தங்களை, ஃபிலாஸபியை, விளக்குவதற்கே ஆரண்யகங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மறை பொருளாகவும், உருவகமாகவும் வேதத்தில் சொல்லியிருப்பதை ஆரண்யகம் விண்டு விளக்கும். யாகம் பண்ணுவதைவிட அதன் உள்ளர்த்தத்தை விசாரணை செய்வதுதான் ஆரண்யகங்களுக்கு முக்கியம். காட்டிலே (ஆரண்யகங்களிலே) ஆசிரமவாஸிகள் சேர்ந்து பண்ணின இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் ரூபமாகவே ஆரண்யகங்களை இக்கால அறிவாளிகள் கருதுகிறார்கள். ஆரண்யகமாகவும் உபநிஷத்தாகவும் சேர்ந்து இருக்கப்பட்ட ப்ருஹதாரண்யக உபநிஷத், அச்வமேத யாகத்தைப் பற்ரிய இப்படிப்பட்ட தத்வ விளக்கத்தோடுதான் ஆரம்பிக்கிறது.

Source:subadra (http://periva.proboards.com/user/1813)
***************

கொழுப்பைக்-கரைக்கும்-கொள்ளு April 24, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
1 comment so far

soundararajan​ ​
has just posted in the Health & Fitness Suggestions forum of Facebook+1 for Brahmins under the title of கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3234-கொழுப்பைக்-கரைக்கும்-கொள்ளு

Here is the message that has just been posted:
***************

Horse Gram makes US Race Horse !!
கொழுப்பைக் கரைக்கும் கொள்ளூ. . .இளைத்தவனுக்கு எள்ளு… கொழுத்தவனுக்கு கொள்ளு…` என்பர் பெரியோர். நாம்கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்டகொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும்கொள்ளு!புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின்சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்றுஅழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்குகொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லதுஎன்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள்சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும்உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்…’ என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில்கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும்.ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிகசுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.இம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா?கொள்ளு- பருப்பு பொடிதேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – 4 கப்கொள்ளு – 1/2 கப்மிளகு – 20 மிளகாய் வற்றல் – 10பெருங்காயம் – 1 சிட்டிகைஉப்பு – 2 டீஸ்பூன்செய்முறை. . .

* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.

* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.

* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.

* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.

* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.உபயோகிக்கும் முறைஇந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்துசாப்பிடலாம்.சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.

பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி’ சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது
***************

நாய்க்குட்டிகளை-காப்பாத்திய-ராஜநாகம் April 23, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
1 comment so far

Padmanabhan.J has just posted in the News & Knowledge to Share forum of Facebook+1 for Brahmins under the title of இரண்டு நாய்க்குட்டிகளை காப்பாத்திய ராஜ&#.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3230-இரண்டு-நாய்க்குட்டிகளை-காப்பாத்திய-ராஜநாகம்
Here is the message that has just been posted:
***************

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்…

இரண்டு நாய் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில் விழுந்து விட்டன.இதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்து கொண்டே இருந்தது.

சத்தம் கேட்டு கிணற்றை எட்டி பார்த்த முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி.தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள் கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன் அருகில் பெரிய ராஜநாகம் படம் எடுத்து ஆடிக் கொண்டு இருந்தது.

கிணற்றில் ஒரு பகுதி கரையும் மறு பகுதி தண்ணீரும் இருந்தது.ராஜநாகம் நாய் குட்டிகளை ஒன்றும் செய்யவில்லை,நாய் குட்டிகள் தண்ணீரில் இறங்காதவாறு காவல் காத்து கொண்டு இருந்தது.

ராஜநாகம் மற்றும் நாய் குட்டிகள் 48 மணி நேரம் கிணற்றில் ஒன்றாக இருந்தன.இந்த 48 மணி நேரமும் நாய் குட்டிகள் தண்ணீரில் விழாதவாறு ராஜநாகம் அமைதியாக காவல் காத்து கொண்டு இருந்தது.

பிறகு வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கிய போது ராஜநாகம் மறு கரைக்கு சென்றது.நாய் குட்டிகளை காப்பாற்றிய வனத்துறையினர் அந்த ராஜநாகத்தையும் காப்பாற்றி காட்டில் விட்டனர்.

”அதிகம் விஷம் உடைய ஒரு ராஜநாகம் இரண்டு சிறிய உயிரனத்துக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பு கொடுக்கும் இந்த பூமியில் தான், சின்னஞ்சிறு குழந்தைகளையும் சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது”

இதுபோன்ற உயிர்களிடத்தில் இருந்தாவது நல்ல பண்புகளை கற்று கொள்ளுங்கள் மனித மிருகங்களே…

via Ilayaraja Dentist.Attachment 497 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=497)
***************

*வாழ்க்கையின் உண்மை * April 20, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
1 comment so far

Padmanabhan.J has just posted in the News & Knowledge to Share forum of Facebook+1 for Brahmins under the title of வாழ்க்கையின் உண்மை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3205-வாழ்க்கையின்-உண்மை

Here is the message that has just been posted:
***************
​​
*வாழ்க்கையின் உண்மை *

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ…ைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது.

கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.

அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.

அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.

உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்.

***************

New Post/Thread Notification: Varnashrama Khandam April 19, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

_


P.S.NARASIMHAN has just posted in the Varnashrama Khandam forum of Facebook+1 for Brahmins under the title of ஸ்ரீவைஷ்ணவம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3194-ஸ்ரீவைஷ்ணவம்

Here is the message that has just been posted:
***************
ஸ்வாமின்
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயதிலே இரு பிருவிகள் வடகலை ,தென்கலை என்பவர்களுக்கு ஆசார்ய சம்பந்தம் இருந்தாலும் அவர்களிலும் சிலர் தங்களை ஸ்வயம் ஆசார்யர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களே. அவர்கள் ஸமாஸ்ரயண,பரன்யாஸங்களை யார் மூலம் அனுக்ரஹித்துக்கொள்வார்கள் .
ஏன் அவர்கள் தங்களை ஸ்வயம் ஆசார்யர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் .
***************

bmbcAdmin has just posted in the Varnashrama Khandam forum of Facebook+1 for Brahmins under the title of ஸ்ரீவைஷ்ணவம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3194-ஸ்ரீவைஷ்ணவம்

Here is the message that has just been posted:
***************

ஶ்ரீ:
ஶ்ரீமடம், ஆச்ரமம் போன்ற எந்த ஒரு அமைப்பையும் சாராது, தங்கள் குடும்பத்திலேயே
பரம்பரை பரம்பரையாக ஆசார்யராக இருந்து, சிஷ்யர்களுக்கு ச்யாமச்ரயணம், பரந்யாஸம்
செய்துவருபவர்களுக்கு ஸ்வயமாச்சர்யர்கள் என்று பெயர்.
ஸ்வாமி ராமாநுஜர் ஓராண்வழி ஆசார்ய பரம்பரை என்ற முறையை எளிமைப் படுத்தி
74 சிம்மாஸனாதிபதிகளை ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களாக நியமித்து, அவர்களை
ச்யாமாச்ரயணாதிகளை சிஷ்யர்களுக்கு நடத்திவைக்குமாறு நியமித்தார்.
அந்தப் பரம்பரையில் வந்த ஒவ்வொருவரும் சீலம், அநுஷ்டானம் மிக்கவர்களாக விளங்கி
ஆசார்யர்களாக இருந்து சிஷ்யர்களுக்கு அந்வயம் செய்து வருகின்றனர்.

ஒழுக்கம், சீலம், ஆசாரம் போன்றவற்றை கடைப்பிடிக்க முடியாத சில வம்சத்தினர்
அவற்றை விட்டுவிட்டனர். தமக்கு நலம் எனத் தோன்றிய ஒரு ஆசார்யரை ஆச்ரயித்து
வருகின்றனர்.
வடகலை, தென்கலை இருபிரிவிலும் ஸ்வயமாச்சார்யர்கள் உண்டு.
(அடியோங்கள் ஸ்வயமாச்சர்யர்கள், ஆனால் தற்போது எனது பரம்பரையில் இருந்து ஆண்டவன் ஸ்வாமியை ஆச்ரயிக்கிறோம்).
தாஸன்,
என்.வி.எஸ்
***************

New Post/Thread Notification: Asoucha Khandam April 17, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
2 comments

bmbcAdmin has just posted in the Asoucha Khandam forum of Facebook+1 for Brahmins under the title of ஜனன-மரண தீட்டு விபரம் – தீட்டு சிறு விளக்க&#2.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/252-ஜனன-மரண-தீட்டு-விபரம்-தீட்டு-சிறு-விளக்க-2

Here is the message that has just been posted:
***************

—Quote (Originally by krishpanchu)—
iS ANY THEETU FOR AMBANDHI?
—End Quote—
Sri:
I hope you are asking for Sambandhi?
No theetu for Sampandhi if generally asking.
Your question should be specific, and should not ask for some one,
should assume yourself as in the stage and ask for theetu, then only correct statement can be given.

அதாவது,
என்னுடைய சம்பந்திக்கு தீட்டு உண்டா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
அதற்கு பதில் கேள்வி கேட்பவர் தன்னையே சம்பந்தியாக நினைத்துக்கொண்டு,
அவர் கேட்பதுபோலவே கேட்கவேண்டும்.

உதாரணமாக:
பெண்ணைக் கொடுத்தவரும் சம்பந்திதான், பெண் எடுத்தவரும் சம்பந்திதான்.
பெண்ணைக் கொடுத்த சம்பந்தியின் பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
அப்போது அவருக்கு 3 நாள் தீட்டு உண்டு.
பெண்ணை எடுத்தவருக்கு பையன் மூலம் மாற்றுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அப்போது அவருக்கு 10 நாள் தீட்டு.
எனவே அப்படிக் கேட்காமல்,
என் மாற்றுப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது எத்தனை நாள் தீட்டு என்றோ,
என் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது எத்தனை நாள் தீட்டு என்றோ,
குறிப்பிட்ட நபராக நின்று விளக்கமாக கேள்விகேட்டால் பதில் சொல்பவருக்கும் சுலபம்,
புரிந்துகொள்வதும் சுலபம்.
குறிப்பு:- இதைத் தங்களுக்காக எழுதவில்லை, இதுபோன்ற கேள்வி கேட்பவர்கள் அனைவரும்
புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது.
நன்றி,
என்.வி.எஸ்
***************

%d bloggers like this: