jump to navigation

*உலகங்கள் மொத்தம் 14 அதன் விவரம் * September 30, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

உலகங்கள்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5225-உலகங்கள்

Here is the message that has just been posted:
***************
*உலகங்கள் மொத்தம் 14 அதன் விவரம் *

மேலுள்ள உலகங்களும், அங்கு வசிபோரும்…

1, பூலோகம் – மனிதர், விலங்கு முதலியோர்.

2, புவர் லோகம் – சூரியன் முதலான கிரகங்களும், நட்சத்திரங்களும். மற்றும் சூக்ஷ்ம வடிவத்தில் உள்ள கின்னரர் முதலியோர்.

3, சுவர் லோகம் – இந்திரன் முதலான தேவர்கள், அதிஷ்டான தேவதைகள், மஹரிஷிகள், கந்தவர்கள், அப்ஸரஸ்கள் முதலியோர்.

4, மஹர் லோகம் – மார்க்கண்டேயர் முதலான தவ முனிவர்கள்.

5, ஜனோ லோகம் – பித்ருக்கள்.

6, தபோ லோகம் – அயோ நிஜ தேவதைகள்.

7, சத்ய லோகம் – ப்ரம்மர்கள்.
*
கீழ் உள்ள உலகங்களும் அங்கு வாழ்வோரும்.*..

1, அதல – அசுரர்கள்.

2, விதல – அசுரர்கள்.

3, சுதல – மஹாபலி முதலியோர்.

4, தராதல – மாயாவிகள், அசுரர்கள், ராக்ஷஸர்கள்.

5, மஹாதல, மற்றும் 6, ரசா தல – அசுரர்களில் சிறப்பான நிவாதகவசர், காலகேயர் முதலியோர்.

7, பாதால – வாசுகியுடன் கூடிய கடும் விஷம் கொண்ட பாம்பு கூட்டங்கள், மிகப்பெரிய சர்ப்பங்கள்…

Source:Swarnagiri Vasan
***************

​ God! One more chance please! September 28, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
3 comments

​​

​​

God! One more chance please!

———————————–
 

It’s another morning….  I have to go to office.

WHAT???? This is me!!! I shouted seeing my picture in the newspaper. But what the HELL is it doing in the obituary column??

Strange.

One sec… Let me think, last night when I went to bed I had severe pain in my chest, but I don’t remember anything after that, I think I had sound sleep.

Its morning now, oh… It’s already 10:00 AM, where is my coffee? I will be late for office and my boss will get a chance to shout at me.

Where is everyone? I screamed.

“I think there is a crowd outside my room, let me check.” I said to myself.

So many people… Not all of them are crying. But why are some of them crying.

WHAT IS THIS??? I’m lying there on a bed in the drawing room!!!!

“I AM HERE”. I shouted!!! No one listened.
“LOOK I AM NOT DEAD”. I screamed once again!!! No one was interested in me.
They were all looking at me lying on the bed.

I went back to my bed room.

“Am I dead??”  I asked myself.

Where are my wife, my children, my mom-dad, my friends?

I found them in the next room, all of them were crying. Still trying to console each other.

My wife was crying. She was really looking sad.
My little kid was not sure what happened, but he was crying just coz his mom was sad.

How can I go without telling my kid that I really love him, I really do care for him….??
How can I go without telling my wife that she is really the most beautiful and the most caring wife in this world..??
How can I go without telling my parents that I am what I am just because of them…??
How can I go without telling my friends that without them, perhaps I would have
Done wrong things in life- thanks for being there always
When I needed them. And sorry for not being there when they really needed me..

I can see a person standing in the corner and trying to hide his tears. Oh, he was once my best friend, but a small misunderstanding made us part, and we both never let go off our egos….

I went there.. And offered him my hand, “Dear friend. I just want to say sorry for everything, we are still good friends, please forgive me.”

No response from other side, what the hell?? He is still preserving his ego. I am saying sorry, even then!!! I really don’t care for such people.

But one sec.. It seems he is not able to see me!!!! He did not see my extended hand.
My goodness.  AM I REALLY DEAD???

I just sat down next to MYSELF; I also felt like crying.

“OH GOD!!!! PLEASE GIVE ME FEW MORE DAYS.”
I just want to tell my wife, my parents, my kids and my friends how much I love them.

My wife entered the room, she looks beautiful.
“YOU’R BEAUTIFUL” I shouted.
She didn’t hear my words, in fact she has never heard these words from me, coz I have never told her.

“GOD!!!!” I screamed. a little more time plzzzzzzzzzzzzzz.. I cried.

One more chance please-to hug my child, to make my mom smile.. just once, to make my dad feel proud of me at least for a moment…, to say sorry to my friends for everything I have not told and done for them-inspite of that for still being there for me..

Then I looked up and cried!!!!

I shouted..

“GOD!!!! ONE MORE CHANCE PLEASE!!!!”

“You shouted in your sleep,” said my wife as she gently woke me up. “Did you have a nightmare?”

I was sleeping..??!!!
Oh that was just a dream..??!!

My wife was there. She could hear me.
This was the happiest moment in my life!!
I hugged her and whispered.. “U R THE MOST BEAUTIFUL AND CARING WIFE IN
THIS UNIVERSE.. I REALLY LOVE U DEAR”

I just couldn’t understand that in spite of a smile on her face she had tears in her eyes…

I was so HAPPY!!!!!

“THANK YOU GOD FOR GIVING ME ANOTHER CHANCE!!!”
—————————————————
It’s not late.. Forget your egos, forget all that has happened….., and just express your love to others…. Be friendly….. Keep smiling and be happy for ever. .

 

அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள். September 19, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5057-அவசரத்தேவைக்கான-தொடர்பு-எண்கள்

Here is the message that has just been posted:
***************

*நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் :*

அவசர உதவி அனைத்திற்கும்————–911

வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639

போலீஸ் SMS :- ———————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
போலீஸ் : —————————————–100
தீயணைப்புத்துறை :—————————-101
போக்குவரத்து விதிமீறல——————–103
விபத்து :——————————————–100, 103
ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Source:http://taakkootani.blogspot.com/2013/09/blog-post_1993.html
***************

​ உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! September 19, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​
உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?!

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5055-உங்கள்-செல்போன்-ஒரிஜினல்தானா-!-கண்டுபிட-300

Here is the message that has just been posted:
***************
*உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!*

Attachment 1244 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1244)

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்…உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

https://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்

1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

Source:Balaji Thirupullani
***************

கசகசா மருத்துவக் குணங்கள் September 17, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
2 comments

கசகசா மருத்துவக் குணங்கள்:.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5015-கசகசா-மருத்துவக்-குணங்கள்

Here is the message that has just been posted:
***************
1.கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
2.ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.
3.10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.
4.வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

மோர்/ நீர்மோர் (Buttermilk):
தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும். கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

தேவையான பொருட்கள்:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:
வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

*தமிழன் சித்த மருந்தகம் (https://www.facebook.com/tamizhansiddha)*
***************

தற்போதைய மின் கட்டணம் கணக்கிடும் முறை. September 17, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

தற்போதைய மின் கட்டணம் கணக்கிடும் முறை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5016-தற்போதைய-மின்-கட்டணம்-கணக்கிடும்-முறை

Here is the message that has just been posted:
***************
*வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.

(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
—————————————

இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.

(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
——————————-

மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.

(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
————————–

நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.

201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.

500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்

முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300

யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10

யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்

57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00

ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)

நன்றி – அறிந்துகொள்வோம்*

Source:http://muthupetnews.com/we-have-measured-the-electrical-charge-of-the-cover-that-need-to-know/

***************

கல்லீரலில் பாதிப்பு ​சில அறிகுறிகள் September 17, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சி&.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5010-கல்லீரல்-பழுதடைந்துள்ளது-என்பதை-அறிய-சி

Here is the message that has just been posted:
***************
*கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய ​​
சில அறிகுறிகள்!!! உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்

​​
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

வயிறு வீக்கம்

கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

Source:harikrishnamurthy (http://harikrishnamurthy.wordpress.com/author/harikrishnamurthy/)

*
***************

உப்பின் பெருமை September 16, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

உப்பின் பெருமை
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5005-உப்பு

Here is the message that has just been posted:
***************
*உப்பு

உப்பிட்டவரை உள்ளளவும் நினை…’
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே…’*

Attachment 1219 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1219)

இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு நம்மிடம். அர்த்தமற்ற விஷயங்களைக் குறிப்பிடும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னை போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வியர்வையும், அதன் மூலம் வெளியேறும் உப்புச்சத்தும் அதிகமிருக்கும் என்பதால், அந்த அளவு உப்பு தேவைப்படுகிறது. அதுவே குளிர் பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, வியர்வை அதிகமிருக்காது, உப்பின் இழப்பும் அதிகமிருக்காது என்பதால் குறைந்த அளவு உப்பே போதுமானது. உப்பு என்பது நமது ரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால், அதன் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படுகிற நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன. அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால் பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.

*
கூடினாலும் பிரச்னை… குறைந்தாலும் பிரச்னை…*

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

யாருக்கு எவ்வளவு உப்பு?

சாதாரண நபர்களுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும் பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. உப்புக் கழிவானது சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி. அதனால்தான் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருத்துவரை அணுகும்போது, உப்பின் அளவை சரிபார்க்கச் சொல்கிறார்கள். -பருமன் ஆனவர்களும், ஹார்மோன் அளவு சரியில்லாதவர்களும் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

*தவிர்க்க வேண்டிய உணவுகள்…*

ஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள்… இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகளில் எந்த அளவுக்குச் சுவை அதிகமாக இருக்குமோ, அதே அளவுக்கு அவற்றில் சேர்க்கப்படுகிற உப்பின் விளைவால் உண்டாகக் கூடிய பாதிப்புகளும் அதிகம்.

*அயோடைஸ்ட் உப்பு நல்லதா?*

கல் உப்பு, டேபிள் சால்ட் என எல்லாம் இன்று அயோடைஸ்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அயோடின் என்பது ஒரு வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற நம்மைப் போன்ற மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும். அதனால் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, அயோடைஸ்ட் உப்பைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.

*
எந்த உணவில் எவ்வளவு உப்பு?
(ஒவ்வொரு 100 கிராமிலும்)*

தானியங்கள் – 4 முதல் 18 மி.கி.
பருப்பு வகைகள் – 20 முதல் 95 மி.கி.
உப்பு சேர்த்த வேர்க்கடலை – 16 முதல் 41 மி.கி.
பால் மற்றும் பால் பொருள்கள் – 50 மி.கி.

(பசும்பாலில் உப்பு சற்று அதிகம். உப்பு சேர்த்த வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட

சீஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால் அவற்றையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.)

அசைவ உணவுகளில் முட்டை, மாமிசம், மீன் போன்றவற்றில் உப்பு உண்டு. பன்றிக்கறியிலும், கருவாட்டிலும் அதிகளவில் இருப்பதால், உப்பின் தேவை அதிகமிருப்போருக்கு மட்டுமே இவற்றைக் கொடுக்க வேண்டும்.

காய்கறிகள் – 4 முதல் 71 மி.கி.

பழங்கள் – 1 முதல் 3 மி.கி.

காய்கறி மற்றும் பழங்களில் சோடியத்தின் அளவு குறைவுதான். ஆனாலும், காய்கறி மற்றும் கீரைகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகம்.

இளநீரிலும் பொட்டாசியம் அதிகமுண்டு. அதனால்தான் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, உடலிலுள்ள நீர்ச்சத்தெல்லாம் வற்றிப் போனவர்களுக்கு இளநீர் கொடுக்கச் சொல்கிறார்கள். இளநீர் குடித்ததும், அவர்கள் புத்துணர்வாகி, எழுந்து உட்கார்வதைப் பார்க்கலாம். அதே இளநீரை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகலாம். இரண்டுக்கும் ஒரே காரணம்தான்… உப்பு!

Source:Nagarathar
***************

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது? September 16, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4999-பச்சரிசியா-புழுங்கலரிசியா-எது-நல்லது

Here is the message that has just been posted:
***************
*பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?*

புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும். ஆனால்,* பச்சரிசியில், உமியெடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன*. *எனவே, புழுங்கலரிசியே சத்தானது*.

கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என இன்று ஏகப்பட்ட அரிசி வகைகள் கிடைக்கின்றன. இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் கிளைசமிக் இன்டக்ஸ் (அதாவது, சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல்) குறைவு. காலையில் இட்லியோ, தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது 3 மணி நேரத்தில் செரித்து விடும். அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்தத்தில் கலந்து, சீக்கிரமே செரித்து விடுகிறது.

சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 110 தான் இருக்க வேண்டும்.

அரிசி உணவின் மூலம் ரத்தத்தில் சேர்கிற ஆற்றலானது, தேவைக்கதிகமாக இருக்கும்பட்சத்தில் அப்படியே சேமிக்கப்படுகிறது. இது சாதாரண உடல் நிலையில் உள்ளவர்களுக்கு ஓ.கே. அதுவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைவாக இருப்பதன் விளைவாக, அதிகப்படியான ஆற்றலானது ரத்தத்தில் சேகரிக்கப்படும். அதனால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு பச்சரிசி வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

*
யாருக்கெல்லாம் அரிசி கூடாது?*

நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோய் உள்ளவர்கள், பருமன் உள்ளவர்கள், முட்டி வலி உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள்… இவர்கள் அரிசி உணவைக் குறைத்து உண்ணலாம் அல்லது செரிமானத்துக்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிற சாமை அரிசி, தினை அரிசி போன்ற வகையறாக்களை சாப்பிடலாம்.

*
பழைய சாதம் நல்லதா?*

மிகவும் நல்ல உணவு. இரவு புதிதாக வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு, காலையில் சாப்பிடலாம். அதில் ஈஸ்ட் உருவாகியிருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியானது. சின்ன வெங்காயத்துடன் சாப்பிடுவது இன்னும் சிறந்தது. நீரிழிவு உள்ளவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் மட்டும் இதை சாப்பிட வேண்டாம். மற்றவர்களும் பழைய சாதம் சாப்பிடுகிற நாள்களில், உடலுக்கு வேலை கொடுக்கிற செயல்களில் ஈடுபடுவது நல்லது.

Source:http://www.siruppiddy.net/?p=16603
***************

Famous Fathers of The World. September 16, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

Famous Fathers of The World.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4998-Famous-Fathers-of-The-World

Here is the message that has just been posted:
***************

**Branch of Subject – Founding Father**

Father of Natural History – Aristotle
Father of Botany – Theophrastus
Father of DNA fingerprinting – Alec Jeffreys
Father of Parasitology – Platter
Father of Gene Therapy – Anderson

Father of Ethology – Konrad Lorentz

Father of Antibiotics – Alexander Fleming
Father of Taxonomy – Carolus Linnaeus
Father of Immunology – Edward Jenner
Father of Microbiology – Louis Pasteur

Father of Cytology – Robert Hook

Father of Bacteriology – Robert Koch
Father of Blood Circulation – William Harvey
Father of Virology – W.M. Stanley
Father of Conditioned Reflex – Ivan Pavlov

Father of Modern Embryology – Ernst Von Baer

Father of Psychology – Sigmund Freud
Father of Cloning – Ian Wilmut
Father of Printing – Guttenberg
Father of History – Herodotus

Father of Economics – Adam Smith

Father of Philosophy – Socrates
Father of Sociology – Agustus Comte
Father of English Poetry – Geoffrey Chaucer
Father of Biology – Aristotle
Father of Essay – Mongaigne

Father of Medicine – Hippocrates

Father of Homeopathy – Samuel Hahneman
Father of Socialism – Robert Owen
Father of Scientific Socialism – Karl Marx
Father of Co-operation – Robert Owen
Father of Jurisprudence – John Locke

Father of Atom Bomb – Otto Hahn

Father of Genetics – Gregor Mendel
Father of Motor Car – Henry Ford
Father of Reformation – Martin Luthur
Father of Greek Democracy – Clesthenes

Father of Mathematics – Pythagorus

Father of Modern Cartoon – William Hogarth
Father of Modern Computer – Charles Babbage
Father of Nuclear Physics – Ernest Rutherford

Father of Modern Drama – Henrik J. Ibsen

Father of Modern Tourism – Thomas Cook
Father of Painting – Leonardo DaVinci
Father of Green Revolution – Norman Borlaug
Father of Renaissance – Petrarch
*http://generalknowledgeandinformation.blogspot.com/2012/11/famous-fathers-of-world.html*
***************

%d bloggers like this: