jump to navigation

Sri Paranthaman Panchangam – 2014- 2015 – Sri Jaya Year November 29, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

Sri:
Sri:
Expecting your requirement and contribution for this (10th) year Sri Paranthaman Panchangam!

Sri Jaya Varusham – 2014-2015.

Advertisements

*Important Tips To All Ladies !* November 29, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​*Important Tips To All Ladies !*​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6103-Important-Tips-To-All-Ladies-!

Here is the message that has just been posted:
***************
*Important Tips To All Ladies !*

1. Do not shave off your eyebrows only to redraw them with a pencil… it makes no sense

2. Do not put on too much make up, you end up looking like you came out of the make-up factory.

3. Do not wear a vest or sleeveless top without shaving your armpits or without a bra underneath

4. Do not leave chipped nail polish to wear off on its own, there’s a reason why they sell nail polish remover.

5. If you can’t afford good quality weaves, don’t bother.

6. Do not do artificial nails that makes you look like a drag queen, simple is always sexy.

7. See-through leggings or a top used as a dress when you are out in public is a hell-to-the-no!

8. Never do things for a man with a hope of getting something in return, expectations are dangerous. Do it because you simply want to.

9. Never contradict what your man says – in public.

10. Never stalk the man that left you for the other woman

11. Do not share your best friend’s personal life with every Tom, Dick and Harry.

12. Women should never act on distress in relationships like checking your man’s phone, nagging him to death, and acting like a paranoid freak. You will simply release him to someone else by doing so.

13. Never dish out your entire family drama on a first date. The guy just wants to know about you.

14. Stop obsessing over your body. It’s good to eat healthy. and work out but let’s leave it at that.

15. Say No to wearing over accessories; stop looking like a Christmas tree.

16. Never leave home without lip gloss, your phone and most of all, your dignity.

17. Never leave your used sanitary towel in the toilet for the next person to see. Women please!

18. Never wear very high heels if you can’t do the Naomi Campbell walk. You look like a drunk grasshopper.

19. Never wear short skirts and low cut tops when off to an Interview. You will create the wrong impression.

20. And finally, ‘Never wish to be like any other woman. There are others out there envying you for who you are’

21.Be good. Be yourself. Be Nice.

Source:Ananthanarayanan Ramaswamy
***************

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித் தர வேண்டிய விஷயங்கள்! November 29, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6106-பெண்-குழந்தைகளுக்கு-அப்பாக்கள்-சொல்லித

Here is the message that has just been posted:
***************

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்

4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்

10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்

11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்.

***************

*ஏழரை சனி* November 29, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​*ஏழரை சனி*​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6074-ஏழரை-சனி

Here is the message that has just been posted:
***************
*ஏழரை சனி*

*’குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட் டில் சொந்தம்’* November 26, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

‘குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்&#.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6045-குளிர்பானம்-வாங்குபவருக்குத்தான்-பாட்

Here is the message that has just been posted:
***************

​*’குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’*​

சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர் பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்க மறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.

கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ”ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம். அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது” என்று வாதிட்டார். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ”ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம். மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன” என்று வாதிட்டார். ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில், ‘குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ என்று தீர்ப்பானது.

ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில், ‘குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ என்று தீர்ப்பானது.

Source: Vikatan
***************

சிறுநீரகம்–நோய் தீர. November 26, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

சிறுநீரகம்–நோய் தீர.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6052-சிறுநீரகம்-நோய்-தீர

Here is the message that has just been posted:
***************
*சிறுநீரகம் தொடர்பான வியாதிகள் இப்போது அதிகம் உருவாகின்றன.
அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
வீட்டிலே அதற்கான வைத்தியம் செய்ய முடியும்.
வாழைத்தண்டு எப்படி உபயோகமாகிறது பார்ப்போம்.
வரதராஜன்*

*_"_சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு…!

*சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர ்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது . உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுக ின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவ தாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர

உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்க ு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

* உடலைக் குளிர்ச்சியடையவ ைக்கும் தன்மையிருப்பதால ் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. <

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

இஞ்சியின் மருத்துவ குணங்கள். November 24, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

இஞ்சியின் மருத்துவ குணங்கள்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6032-இஞ்சியின்-மருத்துவ-குணங்கள்

Here is the message that has just been posted:
***************
*இஞ்சியைப்பற்றி ஆங்கிலத்தில் இத்தளத்தில் வந்திருக்கிறது. தமிழில் இஞ்சியின் மருத்துவ குணங்களை விவரிக்கும் ஒரு வலைப்பதிவை கீழே தருகிறேன்.

படித்து பயனடைய வேண்டுகிறேன்.
இஞ்சியை அதிகம் உபயோகியுங்கள்.நலமுடன் வாழுங்கள்.
வரதராஜன்*

இஞ்சி
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?

தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!

சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.

இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!

இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

.

.

.
***************

சமையலறை சமாளிப்புகள் November 24, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
1 comment so far

​சமையலறை சமாளிப்புகள்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/1780-சமையலில்-சந்தேகமா-இங்கு-வாருங்கள்-!

Here is the message that has just been posted:
***************
சமையலறை சமாளிப்புகள்

இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் – சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.

"சொத சொத’வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.
கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.

சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.
வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்

Facebook
***************

New Post/Thread Notification: Shradhdha Khandam November 18, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

பெரியவா புரிய வைத்த ஸ்ரார்த்தம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5928-பெரியவா-புரிய-வைத்த-ஸ்ரார்த்தம்

Here is the message that has just been posted:
***************
Courtesy:Sri.Mannargudi Sitaraman Srinivasan

ஸ்ரார்த்தம்:- ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஜகத் குரு

கால-பைரவாஷ்டமி November 18, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

கால பைரவாஷ்டமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5908-

​​
கால-பைரவாஷ்டமி

Here is the message that has just been posted:
***************

—Quote (Originally by kgopalan37)—
25-11-2014— காலபைரவாஷ்டமி.:

பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்களான கணபதி, முருகன், பைரவர், வீர பத்ரர், சாஸ்தா ஆகிய ஐவரில் இவர் ஒருவர்., அந்தகாஸுரணை ஸம்ஹரிக்க 64 பைரவராகி எல்லா அசுர்ர்களையும் அழித்தார். 64 யோகினிகளை மணந்தார்.

சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய —காசியில் சிவ கணங்களுக்கு தலைவரான, ப்ருஹ்மாவின் சிரஸ்ஸை கொய்த இவர் கால பைரவர்., மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ர பாலகர், சத்ரு ஸம்ஹார பைரவர், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என்று பல பெயர்களில் பூஜிக்கபடுகிறார்.

சிவாலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் காக்ஷி தருவார் பைரவ மூர்த்தி.

ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429.”” காலாஷ்டமீதி விக்ஞேயா கார்திகஸ்ய
ஸிதாஷ்டமீ தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம் பூஜாம் மஹாஸம்பாரவிஸ்தரை: நரோ மார்கஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத்.””

கார்திக மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது கால பைரவாஷ்டமி என ப்பெயர். இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாஸமிருந்து விரிவான முறையில் மாலையில் பைரவரை பூஜிக்க வேண்டும். இரவில் இவர் சரித்ரம் ஸ்தோத்ரம் சொல்லி கண் விழித்ருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் மனிதனுக்கு ஒரு வருஷம் வரை எந்த தடங்கலும்
இருக்காது. மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும். தடைபட்டிருக்கும் திருமணம், வீடுக்கட்டுதல், வேலை வாய்ப்பு, வ்யாபாரம் போன்ற அனைத்தும் நடைபெறும். பைரவர் படத்திலோ அல்லது சிவனின் படத்திலோ பூஜை செய்யவும்.

நைவேத்யம்: தேன், அவல் பாயசம், தயிர் சாதம்,, செவ்வாழை முதலியன .

பூஜை முடிவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்கியம் விட வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்யம் மட்டுமாவது விடலாமே.

பைரவார்க்யம் க்ருஹாணேச பீமரூபா (அ)வ்ய்யாநக அநேநார்க்ய ப்ரதாநேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இத மர்க்யம்.

சஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்யம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர பைரவாய நம: இதமர்க்யம்.

புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநரர்க்யம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ. பைரவாய நம: இதமர்க்யம்..

.
—End Quote—
We have formed a Committee and we are performing Puja to Kala Bairavar
every Ashtami day both They Pirai and Valar Pirai. Kumkum Abishegam is
done on these days besides other Abishegams. We have planned for a
big puja on 25th November 2014. Thank you very much for the above
inputs.

Balasubramanian NR
***************

%d bloggers like this: