jump to navigation

பூமகளைக் காத்த ஸ்ரீபூவராக ஸ்வாமி! January 5, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
trackback

பூமகளைக் காத்த ஸ்ரீபூவராக ஸ்வாமி!

பூமகளைக் காத்த ஸ்ரீபூவராக ஸ்வாமி, வெற்றிப் பெருமிதத் துடன், சங்கு-சக்கரம் ஏந்திய இரண்டு கைகளையும் இடுப்பி ல் வைத்தபடி நின்றார். அசுரனுடன் போரிட்டதால்

ஏற்பட்ட அயர்ச்சி தீர, சற்றே இளைப்பாறினார். அவரது உடம்பில் இருந்து வியர்வை ஆறாகப் பெருகியது!

அப்படி அவர் நின்று இளைப்பாறிய திருவிடம், புகழ்பெற்ற திருத்தலமாகவும், அவர்மேனியில் வழிந்தோடிய வியர்வை , குளமாகத் தேங்கி, புண்ணியமிகு தீர்த்தமாகவும் உருவாயி ன. அந்தத் திருத்தலம் – ஸ்ரீமுஷ்ணம். பலகோடிப் புண்ணிய ம் தரும் அந்தத் தீர்த்தம் – ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் உள்ள நித்ய புஷ்கரணி!

கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவிலும், ஜெயம்கொண்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது

இந்தத் தலம். ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வான மா மலை, சாளக்ராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்ர மம் ஆகியவையே தானாகத் தோன்றிய ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் (சுயம்பு திருத்தலங்கள்) ஆகும்.

ஊரின் நடுவே, மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது ஸ்ரீபூவ ராக ஸ்வாமி திருக்கோயில். வானுயர்ந்து நிற்கும் ராஜ கோ புரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், நூற்றுக்கால் மண்ட பம், சூக்த மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், அழ கிய பிராகாரம் என அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம்.

நமக்கு இடப்புறம், கிழக்கு நோக்கிய ஆண்டாள் சந்நிதி. அருகிலேயே ஸ்ரீராமானுஜரும் சந்நிதி கொண்டுள்ளார். அடு த்து, பள்ளியறை மண்டபம்; அதற்கு நேர் எதிரில் நம்மாழ் வார் சந்நிதி. பள்ளியறை மண்டபத்தை அடுத்து சொர்க்க வாசல் அமைந்துள்ளது. முறைப்படி தரிசித்து வலத்தைத் தொடர்ந்தால், சப்த மாதர் சந்நிதி. இங்கே இவர்கள் பெருமா ளுக்குச் சகோதரிகளாகவும், தாயாரின் தோழிகளாகவும் திகழ்வதாக ஐதீகம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தீவினைகள் ஆகிய பாதிப்புகள் நீங்க சப்த மாதர்களில், ஸ்ரீவராஹியைப் பிரார்த்திக்கின்றனர்.

பிராகாரத்திலேயே உள்ளது திருப்பதி சீனிவாச பெருமாளின் திருவடி. ஸ்ரீமுஷ்ணம் வருபவர்கள் முதலில் இதை வணங்கவேண்டுமாம். தொடர்ந்து சே னை முதலியார், ஸ்ரீவேதாந்த தேசிகர், மணவாள மாமுனிக ள் ஆகியோரை வணங்கியபடி, தாயாரின் சந்நிதியை அடைய லாம்.

தரிசித்த நொடியிலேயே நமது கவலைகளையெல்லாம் களையும் கருணை நாயகியாக அருள்கிறாள் ஸ்ரீஅம்புஜ வல் லித் தாயார்.

நெய்வேலிக்கு அருகில் உள்ள வளையமாதேவி எனும் தலத் தில், காத்யாயன மகரிஷிக்கு மகளாக அவதரித்த வளாம் இந்தத் தாயார். ஸ்ரீபூவராகரை மணந்துகொண்ட பிறகு, ‘ஊரும் உலகும் வியக்கும் வகையில் அழகிய உருவெடுத்து வரவேண்டும்’ என்று இந்தத் தாயார், ஸ்வாமியை வேண்டி க்கொண்டாளாம். அதன்படி, ஸ்ரீபிரம்மனின் யாகத் தீயில் இருந்து, பேரெழிலுடன் ஸ்ரீயக்ஞ வராகராகத் தோன்றினாரா ம் பெருமாள். இவரே, இந்தத் தலத்துக்கான உற்ஸவர்.

தனக்காக மட்டுமா… அன்பர்களுக்கா கவும் பெருமாளிடம் வேண்டி வரம் வாங்கித் தரும் தயாபரியாம் ஸ்ரீஅம்புஜ வல் லியை வழிபட்டுவிட்டு, ஸ்ரீபூவரா கரை தரிசிக்கச் செல்கி றோம்.

ஸ்வாமியின் கருவறைக்கு நேர் எதிரில் கருடாழ்வார் தரிச னம். கருவறையில்… சுயம்வக்த (தானாகத் தோன்றிய) திரு மேனியராக, இடுப்பில் கரம் வைத்தபடி, அசுரன் இரண்யா க்ஷனை அழித்துவிட்ட வெற்றிப் பெருமிதத்துடன் அருட்கா ட்சி தருகிறார் ஸ்ரீபூவராகர். கருவறை மேற்கு நோக்கியிரு க்க, ஸ்வாமி தென்திசை நோக்கி முகம் திருப்பிக் காட்சி தரு வது அபூர்வ தரிசனம். தென்திசையில் மோட்சகதி அடைந்த இரண்யாக்ஷன், ‘எப்போதும் தங்களின் அருள்பார்வை எனக் கு வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஸ்வா மி இப்படி தரிசனம் தருகிறார் என்பது ஐதீகம்.

இவரை வழிபட, சிறந்த வாக்குவன்மை, நிறைந்த செல்வம், மேலான பதவி, மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கும் என்று சிறப்பிக்கின்றன புரா ணங்கள். கருவறையிலேயே ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உற்ஸவர் ஸ்ரீயக்ஞவராக மூர்த்தியும் காட்சி தருகிறார். அருகிலேயே ஸ்ரீசந்தான கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீஆண்டாள்!
ஸ்ரீமுஷ்ணம் பூவராகரின் சாந்நித்தியத்துக்குச் சான்றாகப் பல்வேறு சம்பவங் களை விவரிக்கின்றனர் பக்தர்கள். அவற் றில் ஒன்று…

பக்கப் பிளவை எனும் நோயால் அவதிப்பட்ட அச்சுதப்ப நாய க்கர் என்பவர், ஸ்ரீமுஷ்ணம் பூவராகரைத் தரிசித்து வழிபட் டு, நோய் நீங்கப் பெற்றாராம். அதற்கு நன்றிக்கடனாக கோ யிலுக்குப் பல திருப்பணிகள் செய்திருக்கிறார் அவர். இன்று ம் புருஷசூக்த மண்டபத்தில் அச்சுதப்ப நாயக்கர் மற்றும் அவ ருடைய சகோதரர்களின் சிற்பங்களைக் காண முடிகிறது.

ஸ்ரீபூவராகரின் திருவருளுக்கு இன்னொரு உதாரணமும் உண்டு. ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது கிள்ளை எனும் திருவிடம். மாசிக் கடல் நீராட்டத் திருநாளின்போது, ஸ்ரீவராகர் இங்கு தீர்த்தவாரிக்காக கிள் ளை கடற்கரைக்கு எழுந்தருள்வார். ஸ்ரீமுஷ்ணத்தில் இருந் து இந்த ஊருக்குச் செல்லும் வழியில் தைக்கால் எனும் சிற்றூர் உள்ளது. ஒருகாலத்தில், பூராசாகிப் என்பவர், இந்த ஊர்மக்களின் தலைவராகத் திகழ்ந்தார். இவருக்குக் குழந் தை பாக்கியம் இல்லை. இதே ஊரில் ஸ்ரீவேங்கடராவ் என்ற அன்பர் ஒருவரும் வசித்தார். இவர், ஸ்ரீபூவராகரை கணப் பொழுதும் மறவாத தீவிர பக்தர்.

பூராசாகிபுவின் மனக்குறையை அறிந்த ஸ்ரீவேங்கடராவ், ஸ்ரீமுஷ்ணம் பூவராக ஸ்வாமியைப் பிரார்த்திக்கும்படி அறி வுறுத்தினாராம். அதன்படி வேண்டிக்கொண்ட பூரா சாகிபுக் கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்ததாம். இதில் மனம் நெகிழ்ந்துபோன பூராசாகிப், தனக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தைத் தனது பெயராலும், வேங்கடராவ் பெ யராலும், ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமியின் ‘கிள்ளை’ மாசிமக உற்ஸவத்துக்காகச் சாசனம் எழுதி வைத்து விட்டாராம். இன்றைக்கும் அந்த உற்ஸவம் வெகு விமரிசையாக நடை பெற்றுவருகிறது.

கிள்ளைக்கு தீர்த்தவாரிக்காகப் புறப்படும் ஸ்வாமி, தைக் கால் கிராமத்தில் இரவு தங்குகிறார். மறுநாள் காலையில், அங்கிருந்து அவர் கிள்ளைக்குப் புறப்படுமுன், பூராசாகிபுவி ன் வழிவந்தவர்கள் தங்களது காணிக்கைகளை ஸ்வாமிக்கு சமர்ப்பிக்க, ஸ்வாமியின் பிரசாதமும் பட்டாடையும் அவர்க ளுக்கு வழங்கப்படுகிறது. அவற்றை பயபக்தியுடன் எடுத்துச் சென்று பூராசாகிபுவின் சமாதியில் (தர்க்காவில்) வைத்து வழிபடுகின்றனர். அப்போது அவர்களது வழிபாடும் ஸ்வாமி க்கான ஆராதனைகளும் ஒரே நேரத்தில் நடைபெறுவது சிறப்பம்சம். தீர்த்தவாரி முடிந்ததும் கடற்கரையில் வைத்து ம் பூராசாகிபுவின் வாரிசுதாரர் களுக்கு பரிவட்ட மரியாதை கள் வழங்கப்படுகின்றன.

இன்றைக்கும், தமது அடியவர்களின் பிரார்த்தனைகளை குறை வின்றி நிறைவேற்றுகிறார் ஸ்ரீபூவராகர். அசுரனை அழித்து நிலமகளை மீட்டவர் அல்லவா? எனவே, நிலம், மனை போன்றவற்றை விற்பது- வாங்குவதில் பிரச்னை உள்ளவர்கள், ஸ்ரீபூவராகரை வழிபட்டுச் செல்ல, விரைவில் பிரச்னைகள் தீரும். தவிர, இப்பகுதியில் புதிதாக வாகனம் வாங்கும் பக்தர்கள், தங்கள் வாகனங்களுடன் இந்தத் தலத் துக்கு வந்து, ஸ்வாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகின்றன ர். இதனால் விபத்துகள் நிகழாமல் ஸ்வாமி தங்களைக் காப் பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீபூவராகரை தரிசிப்பதுடன், ஸ்ரீசந்தானகிருஷ்ணரை மடியில் வைத்து பூஜித்து வழிபட்டால், விரைவில் குழந்தை வரம் கிடைக்குமாம்.

இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், (தை மாதம் முதல் தேதியன்று) ஸ்வாமிக்கும் ஆண்டாளுக்கும் நடைபெறும் திருக் கல்யாண வைபவம். ஸ்ரீமத்வ சம்பிரதாயத் தினரால் நடத்தப்படும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட, தடைகள் நீங்கி திருமண வரம் கிடைக்கும்.

இவை மட்டுமா..? நாடிவருவோரது இல்லங்களைத் தேடி வந்து குறைதீர்க்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராக ஸ்வாமியின் மகிமைகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் ஒருமுறை ஸ்ரீமுஷ்ணம் சென்று வந்தால், அந்த மகிமைகளை உங்களால் அனுபவபூர்வமாக உணரமுடியும்!
சகல சம்பத்துகளும் பெற்றுத்தரும்

அரச மர வழிபாடு

ஸ்ரீபூவராக ஸ்வாமி இந்தத் தலத்துக்கு வந்து இளைப்பாற நின்றபோது, அவருடைய கண்களில் இருந்து துளசியும் அஸ்வத்த (அரச) மரமும் தோன்றினவாம். இந்தக் கோயிலி ன் ஸ்தல விருட்சமும் அரசமரமே. நித்ய புஷ்கரணி அருகே உள்ள இந்த மரத்தை வலம் வந்து வணங்கி, ஸ்ரீபூவராக ஸ் வாமிக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், தோஷங்க ள் நீங்கும், சகல சம்பத்துகளும் கிடைக்கும் என்கிறார்கள்.

அடியேன்
ரமேஷ் ராஜகோபாலன்

​Forwarded by​

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: