jump to navigation

சாதுர்மாஸ்ய புண்யகாலம் – Details March 18, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
trackback

​சாதுர்மாஸ்ய புண்யகாலம்​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6994-ஸ்ரீ-சௌந்தரராஜன்-சாரிடமும்-ஸ்ரீ-நரசிம்ம

Here is the message that has just been posted:
***************
அன்புள்ள ராதாகிருஷ்ணன் சார் அவர்களுக்கு,
இன்டர்நெட்டில் தேடி சாதுர்மாஸ்ய புண்ய காலத்தை பற்றி அறிந்ததகவல்களைபகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு மேலும் தகவல்கள் கிடைத்தால் இங்குபகிர்ந்து கொள்கிறேன்.
வரதராஜன்

சாதுர்மாஸ்யத்தின் முக்கியத்துவம்
சாதுர்மாஸ்யம் என்றால் என்ன?.
ஆஷாட(ஆடி) சுக்ல தசமியிலிருந்து கார்த்திகை சுக்ல பௌர்ணமி வரையிலான நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய புண்ணிய சுபகாலம் எனப்படும். சிராவணம், பாத்ரபாதம்(புரட்டாசி), ஆஸ்வீனம்(ஐப்பசி), கார்த்திகை ஆகிய* நான்கு மாதங்கள் இதில் அடங்கும். இந்த நான்கு மாதங்கள் திரு மஹாவிஷ்ணுவின் வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகவும், விரைவில் பலன் கிட்டக் கூடியதாகவும் கருதப்படுகிறது.

மஹாவிஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் பெருமையை விவரிக்கும் வராஹ புராணத்தில், சாதுர்மாஸ்யத்தின் மகத்துவம் பற்றி வராக மூர்த்தியும்,பூமா தேவி இடையே ஒரு ருசிகரமான சம்பாஷணை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை, பூமாதேவி, அறியாமை, அற்ப ஆயுள்,பிறவிப் பிணி இவற்றுடன் கலியுகத்தில் பிறந்தவர்களைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு, சிந்தனையுடன் வராகமூர்த்தியை அணுகி, – "பிரபு! இவர்கள் கலியுகத்தில் தங்களுடைய குறைகளிலிருந்து பூரணமாக விடுபட்டு நலமுடனும், வளமுடனும் வாழ தாங்கள் தான் வழி காட்ட வேண்டும். இக்கலியுகத்தில் பிறவி எடுத்த அனைவரின் நிறை, குறைகளை தாங்கள் நன்கு அறிவீர். ஆகையால் அதிக சிரமமில்லாமல் அதே சமயம் முழு பலனை அளிக்கக்கூடிய பிரார்த்தனை முறையை அருளி இவர்களை ரட்சியுங்கள்" என்று வேண்டி நின்றாள்.

அதைக் கேட்ட ஸ்ரீ வராகமூர்த்தி அருள் ததும்பும் புன்னகையுடன் – " தேவி, வருடத்தில் நான்கு மாதங்கள் புண்ணிய சுபகாலமாக கருதப்படுகிறது. இந்த சுபகாலத்தில் செய்யப்படும் தானம், விரதம், ஜபம், ஹோமம் அனேக நன்மைகளை தரவல்லது. மற்ற மாதங்களில் செய்யப்படும் புண்ணிய காரியங்களை விட, இந்த நான்கு மாத காலத்தில் செய்யப்படும் நற்செயல்கள் பலமடங்கு பலன்களை அளிக்கும்." என்று அருளினார்.

अस्ति प्रियतमः कालः चातुर्मास्याभिधो मम ।
दानं व्रतं जपो होमः तत्रानन्तगुणं स्मृतम् ।। वराह 1.16
मासेष्वन्येषु यत्किञ्चित् क्रियते मम तोषणम् ।
ततोप्यनन्तगुणितं चातुर्मास्ये न संशयः ।। वराह 1.17
அஸ்தி ப்ரியதம​: கால​: சாதுர்மாஸ்யாபி⁴தோ⁴ மம |
தா³னம்ʼ வ்ரதம்ʼ ஜபோ ஹோம​: தத்ரானந்தகு³ணம்ʼ ஸ்ம்ருʼதம் || வராஹ 1.16
மாஸேஷ்வன்யேஷு யத்கிஞ்சித் க்ரியதே மம தோஷணம் |
ததோப்யனந்தகு³ணிதம்ʼ சாதுர்மாஸ்யே ந ஸம்ʼஸ²ய​: || வராஹ 1.17
இதைக் கேட்டு பூமா தேவி – " ஹே பிரபு, பன்னிரண்டு மாதங்களில் ஏன் இந்த நான்கு மாதங்கள் மட்டும் புண்ணிய மாதங்களாக கொள்ளப்படுகிறது.? தயவு செய்து அதற்கான காரணத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்." என்று வினவினார்.

ஸ்ரீ வராகர் அதற்கு, தேவி கேள் – "ஆஷாட (ஆடி) மாதத்திலிருந்து தொடங்கி மார்க்கசீர்ஷ (மார்கழி) மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் தட்சிணாயனமாக*வும், புஷ்ய (தை) மாதத்திலிருந்து ஜேஷ்ட (ஆனி) மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் உத்தராயண புண்ய காலமாகவும் அழைக்கப்படுகிறது. பூமியின் இந்த ஒரு வருட காலமானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த நாளில் புஷ்ய மாதத்திலிருந்து ஜேஷ்ட மாதம் வரையிலான காலம் நாளின் பகல் பொழுதாகவும், ஆஷாட மாதத்திலிருந்து மார்க்கசீர்ஷ மாதம் வரையிலான காலம் நாளின் இரவுப் பொழுதாகவும் தேவர்களுக்கு அமைகிறது."

"ஒரு சமயம், மேரு மலையின் சிகரத்தில் அமர்ந்திருந்த பொழுது, தேவர்கள் அனைவரும் – "பிரபு, இரவு பொழுதாகி விட்டது. நாங்கள் செல்லுவதற்கு எங்களுக்கு விடை கொடுங்கள்" என்றனர்.

அச்சமயம், கருநிறத்தில் மினுக்கும் வெள்ளாடையுடன், கரத்தில் பரசு (கோடாலி) வுடன் ஒரு பெண்மணி என் முன் வந்தாள். என்னை நமஸ்கரித்து, – "பிரபு வராக மூர்த்தி, என் பெயர் ராத்திரி. இராப்பொழுதின் அபிமானியாக இருந்து வருபவள். இந்நேரத்தில் எவ்விதமான மங்கள சுப செயல்களும் நடைபெறுவதில்லை. அசுபமானவள் என்று என்னை எல்லோரும் வெறுத்து ஒதுக்கிறார்கள். இவை எல்லாம் எனக்கு மிகவும் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இப்படியே உயிர் வாழ்வதில் எந்தவொரு பயனும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த வேதனையையும், வருத்தத்தையும் என்னால் தாங்க முடியவில்லை, அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அருள்புரிந்தால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்" என்று கூறி நின்றாள்.

தேவர்களும் -" பிரபு! ராத்திரி தேவி தன் மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ தாங்கள் கருணை புரியுங்கள் என்று பிரார்த்தனை செய்தனர்.

நானும் (ஸ்ரீ வராகரும்) தேவர்களின் பிரார்த்தனையை ஏற்று ராத்திரி தேவிக்கு வரம் அளித்தேன்.

நான், (ஸ்ரீ வராக மூர்த்தி) ராத்திரி தேவியிடம் – "உன் வருத்தத்தை போக்கி நீ மகிழ்வுடன் வாழ உனக்கு வரமளிக்கிறேன். ஒரு நாளின் இரவுப் பொழுதை மூன்று யாமமாக பிரித்து, (ஒரு யாமம் = இரண்டு மாதம்) அதில் முதல் இரண்டு யாமம் அதாவது 4 மாதங்கள், இனி மேல் எனக்கு பிரியமானதாக ஆகும். இந்த நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்று அழைக்கப்படும். சாதுர்மாஸ்யத்தில் செய்யப்படும் புண்ணிய தர்ம காரியங்கள் நிறைந்த நன்மைகளை அளிக்கும். சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீனம், கார்த்திகை ஆகிய நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களில் நற்செயல்களினால் விளையும் புண்ணியமானது நாளுக்கு நாள் கூடுதல் காணும். இக்காரணத்தினால் தான் கடைசி மாதமான கார்த்திகை அனைத்து விதங்களிலும் மிகுந்த நன்மையளிக்கும் மாதமாக கருதப்படும் " என்று அருளினேன். இதைக் கேட்டு ராத்திரி தேவி மிகுந்த மகிழ்வுடன் தன்னுடைய வந்தனத்தை சமர்ப்பித்து தன் இருப்பிடம் சென்றாள்.

"ஒ தரணி(பூமா) தேவி, அப்பொழுதிலிருந்து இந்த நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களும் எனக்கு மிகவும் பிரியமானதாகும். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, தானம் செய்வது, விரதம் மேற்கொள்ளுவது, ஹோமம், யக்ஞங்களை நடத்துவது, ஜபம் செய்வது போன்ற புண்ணிய தர்ம செயல்களை செய்பவர்களுக்கு நான் மிகுந்த நன்மைகளை அளிக்கிறேன்." என்று அருளினார்.

சாதுர்மாஸ்யம் பிரபு நாராயணர் யோக நித்ரையில் ஆழ்ந்து போகும் காலமும் ஆகும். யோக நித்திரையில் ஆழ்ந்து போகுதல் என்றால் நாராயணன் மானிடரைப் போல் நித்திரையில் ஆழ்கிறார் என்ற அர்த்தம் அல்ல. தேவர்கள் எல்லோரும் இமைப் போதும் தூங்காமல் இருப்பவர்கள். அப்படியிருக்க, தேவர்களைப் படைத்த இப்பிரபஞ்சத்தின் காவலரான நாராயணர் எப்படி உறங்க முடியும்? ஆகையால் நித்திரையில் ஆழ்வது என்பது கடவுளின் ஒரு திருவிளையாடல் ஆகும்.

ஸ்ரீதரர், ஹ்ருஷீகேசர், பத்மநாபர் மற்றும் தாமோதரர் என்னும் தன் நான்கு திருவடிவங்களில் பிரபு நாராயணனே சாதுர்மாஸ்ய மாதங்களின் முக்கிய வணங்குதற்குரிய தெய்வமாவார்.

பக்தியை மேலும் அதிகரித்துக் கொள்ள சாதுர்மாஸ்ய காலம் ஒரு அருமையான வாய்ப்பாவதோடு மோட்சப் பிராப்தி பெறுவதற்கான வழியின் முதல் படியாகவும் அமைகிறது. நம்முடைய சாஸ்திரங்கள் கீழ்க்கண்ட பத்து புண்ணிய தீர்மானங்களை (நியதிகளை) சாதுர்மாஸ்யத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று விதித்து உள்ளது.

1. Satsanga / சத்சங்கம்
2. Dvijabhakti / த்விஜ பக்தி
3. Guru, Deva, Agni Tarpana / குரு, தேவர், அக்னி தர்ப்பணம்
4. Gopradana / கொப்பரை தானம்
5. Vedapatha / வேதம் அத்யயனம்
6. Satkriya / சத் கிரியை
7. Satyabhashana / சத்ய பாஷனை
8. Gobhakti / கோ பக்தி அதாவது கோபூஜை
9. Dana Bhakti / தான பக்தி
10. Dharma Sadhana / தர்ம சாதனை

சாதுர்மாஸ்ய புண்யகாலம்
***************

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: