ஆவணி மாத விரதங்கள். July 19, 2014
Posted by Dr.NVS in Brahminsnet Postings.trackback
கோகுலாஷ்டமி.
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8224-கோகுலாஷ்டமி
Here is the message that has just been posted:
***************
ஆவணி மாத விரதங்கள்..
17-8-2014. கோகுலாஷ்டமி
ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமி திதி ரோகிணி நக்ஷத்திரம் அன்று நள்ளிரவில் கிருஷ்ணாவதாரம்.. இன்று கிருஷ்ணர் பூஜை,இரவில் உபவாசம், பகலில்.. ஶ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ண ஜனனம் ( பத்தாவது ஸ்கந்தம் மூன்றாவது சர்க்கம்) பாராயணம் செய்யலாம். அல்லது பாராயணம் செய்வதை கேட்கலாம்.
11-8-2014 முதல் 17-8 14 முடிய ஶ்ரீமத் பாகவதம் சப்தாஹ விதிப்படி ஏழு நாட்கள் பாராயணம் செய்யலாம். அல்லது 17-8-2014 முதல் 23-8-2014 முடியவும் பாராயணம் செய்யலாம். கர்போத்சவம் அல்லது ஜனனோத்சவம் என்று கூறப்படும் இவை ஒன்றில் பாராயணம் அல்லது பிறர் சொல்ல கேட்டல் செய்வது சிறந்தது.
(1() முதல் ஸ்கந்தம் முதல் ஸர்க்கம் முதல் 3ஆவது ஸ்கந்தம் 19 ஆவது ஸர்க்கம் முடிய. யக்ஞ் வராஹ சரித்ரம் –நிவேதனம்:– சக்கரை வள்ளி கிழங்கு;, கடலை உருண்டை.
(2) 3ஆவது ஸ்கந்தம் 20 ஸர்க்கம் முதல் 5ஆவது சர்க்கம் 3ஆவது ஸர்க்கம் முடிய; த்ருவ சரித்ரம்;-நிவேதனம் பழ வகைகள்.
(3). 5ஆவது ஸ்கந்தம் 4 முதல் 7ஆவது ஸ்கந்தம் 5ஆவது ஸர்க்கம் முடிய
ஶ்ரீ ந்ருஸிம்மாவதாரம்—நிவேதனம்—பானகம்—நீர்மோர்.
(4). 8ஆவது ஸ்கந்தம் ஒன்றாவது ஸர்க்கம் முதல் 10ஆவது ஸ்கந்தம் 3ஆவது ஸர்க்கம் முடிய. பயோ விரதம். நிவேதனம்—பால் பாயாஸம்.
(5) 10ஆவது ஸ்கந்தம் 4 முதல் 10ஆவது ஸ்கந்தம் 54 ஆவது ஸர்க்கம் முடிய – ருக்மணீ கல்யாணம்—நிவேதனம்- பருப்பு தேங்காய்—பக்ஷணங்கள்.
(6). 10ஆவது ஸ்கந்தம் 55 ஆவது ஸர்க்கம் முதல் 11ஆவது ஸ்கந்தம் 13ஆவது ஸர்க்கம் முடிய. —குசேலோபாக்யானம்—நிவேதனம்—அவல், பழம்.
(7) 11ஆவது ஸ்கந்தம் 14ஆவது ஸர்க்கம் முதல் 12ஆவது ஸர்க்கம் 13ஆவது ஸர்க்கம் முடிய –ஶ்ரீ பாகவத பூர்த்தி- நிவேதனம்- வடை; பாயஸம்; சக்கரை பொங்கல்.
இவ்வாறு செய்து வழிபடலாம்.. பாகவத ஸப்தாஹம் என்பது இம்மாதிரி பாராயணம் செய்வதே.
***************
Comments»
No comments yet — be the first.