jump to navigation

தீபாவளி October 30, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் – என்.வி.எஸ்.

http://www.brahminsnet.com/forums/showthread.php/5629-

​தீபாவளி

நிர்ணய சிந்து—147:— “”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி””.

அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.

நிர்ணய சிந்து-148—-அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்
ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை
ஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித
ஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;

தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.

கிழக்கு நோக்கி அமரவும். ஆச்வயுஜ க்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும். சுத்த ஜலத்தால் . தர்பணம் செய்யவும். மஞ்சள் கலந்த அக்ஷதை, பூணல் வலம். உபவீதம்.தேவ தர்பணம்.

யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாய ச, வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாயவை நம: இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.

1. யமாய நம: யமம் தர்பயாமி.
2. தர்மராஜாய நம; தர்மராஜம் தர்பயாமி
3. ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி.
4. அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி.

5. வைவஸ்வதாய நம: வைவஸ்வதம் தர்பயாமி
6. காலாய நம: காலம் தர்பயாமி.
7. சர்வபூத க்ஷயாய நம: ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி.
8. ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி.

9. தத்நாய நம: தத்நம் தர்பயாமி
10. நீலாய நம: நீலம் தர்பயாமி
11. பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி.
12. வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ராய நம: சித்ரம் தர்பயாமி

14. சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி..

ஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்மயோ: என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.

welcome.pngindia-flag.gif Dear bmbcAdmin,
Thanks for Visiting Brahmins Net!
JAI HIND! Feel free to post whatever you think legal, moral and fun or useful!
Kindly invite your friends to this forum, if you feel it is worth!!
Click here to Invite Friends
Use Contact us only for Personal and Administrative purpose!

இதனால் பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்..

தீபாவளி யன்று மாலையில் தீபம்

நிர்ணய சிந்து-141. “ தத்தோ தீபஸ் சதுர்தஸ்யாம் நரக ப்ரீதயே மயா சதுர்வர்த்தி சமாயுக்த: சர்வ பாபாபநுத்தயே”

தீபாவளியன்று மாலையில் தனது வீட்டிலும் பக்கத்திலுள்ள சிவா/ விஷ்ணு அம்பிகை கோவில்களிலும் நல்லெண்ணெய் விட்டு நான்கு திரிகள் போட்டு விளக்கு ஏற்றி மேற் கணடவாறு ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.

இதனால் நரக பயம் கிட்டாது. சந்தோஷமாக இருப்பார்கள்.

ஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது.; “ப்ரதோஷ ஸமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத் தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: ஷக்த்யா தேவ க்ருஹேஷு சஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸித வஸ்த்ரோப சோபிநா.”

Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/5629-தீபாவளி#ixzz2jDwLaPbc

2-11-13 சனி லக்ஷ்மி குபேர பூஜை. October 30, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

லக்ஷ்மி குபேர பூஜை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5630-லக்ஷ்மி-குபேர-பூஜை

Here is the message that has just been posted:
***************
தீபாவளி யன்று 2-11-13 சனி யன்று மாலையில் ஸுர்யன் மறையும் நேரத்தில் பூஜை செய்பவர்கள் புத்தம் புதிய ஆடைகள் ஆபரணங்கள் மூலம் தன்னை அலங்கரித்துக்கொண்டு அஹம் சிருதி ஸ்ம்ருதி புராணோக்த பலாவாப்தி த்வாரா மஹாலக்ஷிமி ப்ரஸாத சித்யர்த்தம் ஸுக ராத்ர்யாம் மஹா லக்ஷிமியாஹா இந்திர குபேரயோஸ்ச பூஜனம் கரிஷ்யே. என்று சங்கல்பம் சொல்லி மஹா லக்ஷ்மீயை தேவேந்திரன் குபேரனுடன் கூட முறைப்படி படத்திலோ விக்கிரஹத்திலோ, கலசத்திலோ ஆவாஹனம் செய்து ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்ரம் அர்சனை செய்து சுமார் 16 தீபங்களுக்கு குறையாமல் நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும்.

ஓர் தாம்பாளத்தில் பேனா பென்சில் வைத்து அதில் காளியையும், கணக்கு எழுத பயன்படும் நோட்டு புத்தகத்தில் ஸரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து ஓம் இந்த்ராய நம: என்று இந்த்ரனையும் க்லீம் குபேராய நம: என்று சொல்லி குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சக்கரை பொங்கல், பால் நிவேதனம் செய்யவும்.

மஹாலக்ஷிமி, இந்த்ரன், குபேரனை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கலாம். இதனால் வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம் தடங்கலின்றி இருக்கும்.

விச்வரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே
மஹா லக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுகராத்ரீம் குருஷ்வ மே
விஷ்ணோர் வக்ஷஸி பத்மே ச கட்கே சக்ரே ததாம்ப்ரே

லக்ஷ்மி நித்யா தயாஸி த்வம் மயி நித்யா ததா பவ
நமஸ்தே ஸர்வ தேவாநாம் வரதாஸி ஹரிப்ரியே
யாக திஸ் தவத் ப்ரபன்னாநாம் ஸா மே பூயாத் த்வதர்சனாத்.

விசித்ரைராவதஸ்தாய பாஸ்வத் குலிச பாணயே
பெளலோம்யாலிதாங்காய சஹஸ்ராக்ஷாய தே நம:

தநதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பாய ச
பவந்து த்வத் ப்ரஸாதான் மே தந தான்யாதி ஸம்பத:

3-11-13. ஞாயிறு கிழமை அமாவாசை தர்ப்பணம். கேதார கெளரீ வ்ருதம்.

ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கேதார கெளரீ வ்ருதம் அநுஷ்டிக்க படுகிறது. கெளரி என்ற பார்வதி (கேதார்நாத்தில் ஸ்வயம்பூவாக தோன்றிய சிவனுடன்) இடது பாதி பாகத்தை பெற செய்த இந்த வ்ருதம் கேதார கெளரீ வ்ருதம் ஆனது.

இன்று ஒரு கலசத்தில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி கேதாரேஸ்வரரை ஆவாஹனம் செய்யவும். சூலம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே
கேதார தேவ மீசானம் த்யாயேத் த்ரிபுர காதினம்

இத்துடன் 21 இழை 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்ரத்தால் அர்சித்து 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்கவும்.

21 முடிச்சுள்ள மஞ்சள் சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கீழுள்ள மந்திரம் சொல்லி கட்டிக்கொள்ள வேண்டும்.

ஆயுஸ்ச வித்யாம் ச ததா ஸுகஞ்ச ஸெளபாக்கிய வ்ருத்திம் குரு தேவ தேவ ஸம்ஸார கோராம்புநிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே..

பிறகு 21 ஸுமங்கலி பெண்களுக்கு 21 மஞ்சள் கிழங்கு, 21 வெற்றிலை, 21 பாக்கு கொடுத்து நமஸ்கரித்து அவர்கள் ஆசி பெற வேண்டும்..

கார்த்திகை ஸ்நானம். காலையில் தினமும் 4-11-13 முதல் 2-12-13 முடிய.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறு நாள் பிரதமை முதல் கார்திகை அமாவாசை முடிய தினமும் காலையில் சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்யும் வ்ரதம்..
***************

01-11-2013 யம தீபம்.தன்வந்தரி ஜயந்தி. October 30, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
1 comment so far

யம தீபம்.தன்வந்தரி ஜயந்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5628-யம-தீபம்-தன்வந்தரி-ஜயந்தி

Here is the message that has just been posted:
***************
1-11-2013. வெள்ளிக்கிழமை. ப்ரதோஷம், மாத சிவராத்திரி; தன்வந்தரி ஜயந்தி, யம தீபம்..

தன்வந்தரி ஜயந்தி.: மஹா விஷ்ணுவின் ஒரு அவதாரம் இது. கையில் அமிர்த கலசத்துடன் பாற்கடலில் தோன்றியவர். தன்வந்தரி பகவான்.

ஆயுர்வேத வைத்யத்தை ஸ்தாபித்த இவரை இன்று பூஜை, அர்ச்சனை, ஸ்தோத்ரம் சொல்லி வழிப்பட்டால் தீராத அனைத்து நோய்களும் விலகும்.

யம தீபம்: 1-11-13 வெள்ளி இரவு சூர்ய அஸ்தமனத்திற்கு பின் ஸ்காந்த மஹா புராணத்தில் கூறிய படிகீழ் கண்ட படி செய்ய வேண்டும்.

“”ஆஷ்வினஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதச்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி”’.

ஆஸ்வின மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி நாளுக்கு யம தீப த்ரயோதசி எனப்பெயர்.

அன்று மாலை யம தர்ம ராஜாவைக் குறித்து ,வீட்டுக்கு வெளியில் நல்ல எண்ணைய் விட்டு விளக்குகள் ஏற்றி வைத்தல்
, அறியாமல் செய்த பாபங்களையும் ம்ருத்யு பயத்தையும் போக்கும்.

ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் எவ்வளவு நபர்கள் வஸிக்கிறார்களோ , தலா ஒவ்வொரு மண் விளக்கு வீதம் தன் வீட்டு வாசலிலோ அல்லது பக்கத்தில் உள்ள கோவிலிலோ அவரவர்கள் விளக்கு ஏற்ற வேண்டும்.

“மம சர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.

அவரவர்கள் அவரவர் தீபத்திற்கு நமஸ்காரம் செய்யவும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்தித்து கொள்ளவும்.

“” ம்ருத்யுநா பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம”.

ஸூர்ய புத்ரனான யமன் இந்த த்ரயோதசி தீப தாநத்தால் சந்தோஷ மடையட்டும். என்பது பொருள்.

இது வியாதியற்ற நீண்ட ஆயுளை கொடுக்கும். விபத்து நோய் வராமல் அப ம்ருத்யு தோஷத்தை போக்கடிக்கும்.
***************

31-10-2013 கோவத்ஸ த்வாதசி – கன்றுடன் பசுவை பூஜிக ்கவும். October 30, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

கோவத்ஸ த்வாதசி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5627-கோவத்ஸ-த்வாதசி

Here is the message that has just been posted:
***************
31-10-2013 வியாழ கிழமை கோவத்ஸ த்வாதசி.

ஐப்பசி மாத க்ருஷ்ண பக்ஷ த்வாதசிக்கு கோவத்ஸ த்வாதசி என்று பெயர்..
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய்ய வேன்டும்.

பசுமாடு, கன்றுக்குட்டி இரண்டையும் குளிப்பாட்ட வேண்டும். சந்தனம், குங்குமத்தால் புஷ்பங்களால் அலங்கரிக்கவும் .பூஜை செய்யவும். வைக்கோல் புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுக்கவும்.

இன்று மாத்ரம் கன்றுக்குட்டியை முழுவதும் பால் குடிக்க விட்டு விடவும். பால் கறக்க வேண்டாம். நிர்ணய சிந்து-147 “கோக்ஷீரம், கோக்ருதம் சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத்”” என்று சொல்கிறது.

இன்று மட்டும் பசுவின்,- பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் சாப்பிட வேண்டாம் என்கிறது. பசு மாட்டின் கழுத்து பகுதியை சொறிந்து கொடுக்கலாம்.

கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டிற்கு சாப்பிட புல் தர வேண்டும்.” “ஸுரபி த்வம் ஜகன்மாதர் தேவி விஷ்ணுபதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் க்ரஸ.””

கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசுவை வேண்டி கொள்ள வேண்டும்.
“ஸர்வதேவ மயே தேவி ஸர்வ தேவைஸ்ச ஸத்க்ருதா
மாதர் மமா அபிலஷிதம் ஸபலம் குரு நந்தினி.”

இதனால் குடும்பத்தில் அழியாச்செல்வமும் மங்களமும் உண்டாகும்.
***************

இலவச மருத்துவ ஆலோசனை. October 25, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

இலவச மருத்துவ ஆலோசனை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5510-இலவச-மருத்துவ-ஆலோசனை

Here is the message that has just been posted:
***************

*இலவச மருத்துவ ஆலோசனை *

*மதுரை:* பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 104 டெலிமெடிசின் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் முழுப் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பரிசோதனை முறையில் எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

குறிப்பிட்ட நோய் குறித்த தகவல்களை, முதலுதவி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை நோயாளியோ, உறவினரோ இந்த 104ல் தொடர்பு கொண்டு அறியலாம். சென்னையில் இதற்கென கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு, எந்நேரமும் தயாராக உள்ள சிறப்பு டாக்டர்களுக்கு இணைப்பு தருவர்.

இவர்களிடம் எந்த நோய் குறித்தும் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள், அலோபதியுடன், ஹோமியோபதி, சித்த மருத்துவ முறைகள் குறித்தும் கேட்டறியலாம்.இதுகுறித்து ‘104‘ சேவை மையத்தினர் கூறுகையில், ‘‘சோதனை முறையில் இச்சேவை தொடங்கப்பட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. ஆனால், இதில் 15 அழைப்புகளே மருத்துவ ஆலோசனை கேட்டு வருகின்றன. மீதி அழைப்புகள் அனைத்தும் இச்சேவை மூலம் என்னென்ன தகவல்கள் பெறலாம் என மக்கள் ஆர்வத்துடன் விவரம் கேட்பதாகவே இருக்கிறது. தற்போது தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தகவல் தெரிவிக்கிறோம். ஓரிரு வாரங்களில் இச்சேவையை தமிழக அரசு முறைப்படி தொடங்கியதும், 24 மணிநேரமும் தகவல் வழங்கப்படும். இந்த அழைப்பிற்கு வரும் போன் பேச்சு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது என்றனர்.

Source:*dinakaran daily newspaper* (https://www.facebook.com/dinakarannews)
***************

ஆயுத பூஜை,விஜய தசமி October 11, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

ஆயுத பூஜை,விஜய தசமி;.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5378-ஆயுத-பூஜை-விஜய-தசமி

Here is the message that has just been posted:
***************
*ஆயுத பூஜை,விஜய தசமி;

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் October 11, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5334-தயிர்

Here is the message that has just been posted:
***************

*தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்:-

*Attachment 1375 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1375)

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்
இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் ளாக்டோ இருக்கிறது.
தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்
வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை
சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்
இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

Source;Anathanarayanan Ramaswamy
***************

Five Types of NAVARATHRIS October 8, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

NAVARATHRI N A V A R A T H R I .FROM 5-10-2013 TO 13-10-2013.FOR THIS YEAR. THE FIRST NINE DAYS AFTER THE NEW M.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/2373-NAVARATHRI-N-A-V-A-R-A-T-H-R-I-FROM-5-10-2013-TO-13-10-2013-FOR-THIS-YEAR-THE-FIRST-NINE-DAYS-AFTER-THE-NEW-M

Here is the message that has just been posted:
***************
Our festivals are celebrated in tune with nature. One among them is Navarathri Celebrations.

In fact there are Five Navarathris to be celebrated five times a year. They are* Magha Navarathri, Vasantha Navarathri, Gupta Navarathri,Sharad Navarathri, and Pausha Navarathri.

*

Of the five, *Sharad Navarathri* in the beginning of winter during month of Puratasi ( beginning of winter in September-October) is known as Maha Navarathri, celebrated all over the Country., the other one *Vasantha Navarathri *in the beginning of spring(March-April) in the month of Chaitra is celebrated mostly in Northern part of the Country.

The other Navarathris are celebrated at various parts of our Country in different forms.

The beginning of summer and the beginning of winter are two very important junctures of climatic change and solar influence. These two junctions must have been chosen as the sacred opportunities for the worship of the divine power that provides energy for the earth to move around the sun.

With Best Wishes for the Nine nights Festival.
Brahmanyan,
Bangalore.
***************

ஊளைச்-சதையை-குறைக்கும்-சோம்பு-நீர் October 6, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5322-ஊளைச்-சதையை-குறைக்கும்-சோம்பு-நீர்

Here is the message that has just been posted:
***************
*ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்*

Attachment 1368 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1368)

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெணகள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது. வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.

இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

ந*ன்*றி: பசுமை இ*ந்*தியா
***************

உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை..! October 6, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை..!.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/5327-உடல்-எடையை-குறைக்க-உதவும்-வேர்க்கடலை-!

Here is the message that has just been posted:
***************

*உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை..!

*Attachment 1372 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1372)

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும்.

வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது.

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. மேலும் முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

எல்லாவிதமான இரத்தப் போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்க்கடலையாகும்.

உடல் பருமன் உள்ளவர்கள் உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையைச் சாப்பிடவும்.

இத்துடன் சர்க்கரை சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும். வேர்க்கடலையில் உள்ள நியாஸின் தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுக்கிறது.

எந்த வயதினரும் தினமும் அதிகபட்சம் 50 கிராம் வரை சாப்பிட்டால், செயலாற்றல் மிக்க மருந்தாக வேர்க்கடலை செயல்படும்.

வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவது அவசியம். அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் வரும். மேக நோய் இருந்தால் அது வீரியப்படும். நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.

கல்லீரல் கோளாறு, மஞ்சள்காமாலை நோய் முதலியவை இருந்தால் நோய் குணமாக வேர்க்கடலை சாப்பிட வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் தொந்தரவு உள்ளவர்கள் நெருங்கக்கூடாத பொருள் இந்த வேர்க்கடலையாகும்.

Source: Ayurvedam and Siddha Maruthuvam
***************