jump to navigation

திந்திரினி கெளரி விரதம் October 25, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

<a href='http://www.brahminsnet.com/forums/showthread.php/9566-.
13-11-2014 முதல் 22-11-2014 வரை தினமும் அன்ன தானம், நாம ஸங்கீர்த்தனம், ப்ரவசனம், ஸங்கீதம் நடை பெறுகிறது.கும்பகோணம் சங்கர மடத்திலிருந்து திருவிசநல்லூர் சென்று வர van வசதியும் உள்ளது.

திந்திரிணி கெளரி வ்ரதம்:– மார்க சீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை 24-11-2014.

திந்திரிணி என்றால் புளி. புளிய மரத்தின் அடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். புளியஞ்சாதம் மற்றும் புளிப்பு பொருட்கள் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்..

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, பாசம் ஏற்படவேண்டும் என்றால் பார்வதி என்னும் கெளரீயை பூஜிக்க வேன்டும் என்கிறது ஶ்ரீ பாகவதம்.கெளரி என்றால் வெண்மை அல்லது தூய்மை எனப்படும்.

ஜாதகத்தில் சுக்ரன் நீசமாக கன்னியா ராசியில் இருந்தாலோ அல்லது கெடுதலான இடங்களில் சுக்ரன் இருந்தாலோ காலத்தில் திருமணம் நடைபெறாது. திருமணம் ஆனவர்களுக்குள் கருத்து வேற்றுமை, ஒற்றுமை யின்மை. பிரிவு போன்றவை ஏற்படலாம்.. தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படவும் இந்த கெளரீ விரதம் தக்க பரிஹாரமாகும்.

சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்யவும். விரத பூஜா விதானம் புத்தகத்தில் ஸ்வர்ண கெளரி விரதம் போல் இப்பூஜையை செய்ய வேண்டும்.

Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/9566-திந்திரினி-கெளரி-விரதம்#ixzz3HAp34Oez